திராட்சை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்.
சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்குமே திராட்சை பழம் பிடிக்கும். ஆனால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்புவதை விட பாக்கெட் தீனிகளை தான் விரும்புகிறோம். ஆனால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது பழங்கள் தான். அந்த வகையில் தாட்சையில் உள்ள ஆரோக்கிய குணங்கள் ஏராளம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
திராட்சை பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சி, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும் நம் உடலுக்கு தேவையான வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. திராட்சையில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.



