பெற்றோர்களின் கவனத்திற்கு..!! குழந்தைகளின் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா..?? உடனே இதை செய்யுங்கள்..!!
குழந்தைகளுக்கு எந்த விதமான அடியும் படாமல் திடீரென்று மூக்கில் இருந்து ரத்தம் வந்தால் அதனை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அதை ஒருபொழுதும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால் குழந்தைகளை எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது என்று சொல்லும் போது சில்லு மூக்கு உடைந்திருக்கும் என்று கூறுவார்கள். அதுவும் தவறில்லை தான். ஏனென்றால் 80% மூக்கிலிருந்து ரத்தம் வருவதற்கு சில்லு மூக்கு உடைவதும் ஒரு காரணமாக இருக்கிறது. மீதி 20% தான் பிற கோளாறுகளால் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. இருந்தாலும் குழந்தைகளுக்கு மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை சந்திப்பது தான் மிகவும் நல்லது. மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு அலர்ஜி காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.




