பத்து நிமிடத்தில் வீட்டிலேயே சுவையான சிவப்பு அவல் புட்டு இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!
சிவப்பு அவல் புட்டு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இந்த சிவப்பு அவல் பல சத்துக்களை கொண்டுள்ளதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கும் கூட ஸ்கூல் ஆபீஸ் ஸ்னாக்ஸ் பாக்ஸில் இந்த சிவப்பு அவல் புட்டு செஞ்சு அசத்தலாம். இந்நிலையில் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே சிவப்பு அவல் புட்டு எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிவப்பு அவல் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் ரெண்டு கப்
உப்பு இரண்டு சிட்டிகை
தண்ணீர் 4 கப்
நாட்டு சக்கரை அரை கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
ஏலக்காய் தூள் சிறிதளவு
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதன் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் சிவப்பு அவலை சேர்த்து கொரகொரப்பாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொடித்த அவளை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இட்லி தட்டில் ஊறவைத்த அவலை பத்து நிமிடம் சேர்த்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து நன்றாக வெந்த பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே எடுத்து வைத்திருந்த நாட்டுச்சர்க்கரை ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொடுத்தால் சுவையான சிவப்பு அவல் புட்டு தயார். நீங்களும் உங்க வீட்ல கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.




