Oplus_131072
கோதுமை பிஸ்கட்
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
கோதுமை மாவு கால் கிலோ
மைதா மாவு கால் கிலோ
நெய் தேவைக்கேற்ப
சர்க்கரை 1 கப் (பொடியாக்கியது)
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் கால் கப்
செய்முறை :
கோதுமை மாவு, மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை, தேங்காய் துருவல், நெய், உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சப்பாத்தி போல தேய்த்து சிறிய வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும்.
அதன் பிறகு அதை வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து பொரித்து எடுக்கவும்.




