திருவண்ணாமலை மாவட்டத்தில், குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வெங்கடேசன் (35) என்பவரது மனைவி கௌரி (30). இந்த தம்பதிக்கு கிஷோர் (5) மற்றும் தேவேஷ் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. குடிக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த கௌரி, தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.




