கடலூர் மாவட்டத்தில், இடிதாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார். வேப்பூர் அருகே நேற்று (அக்.16) வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு, பாமக தலைவர் அன்புமணி ரூ.25 வழங்க வேண்டும் எனவும் நாதக சீமான் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.




