தனிமையை தவிர்க்க….. குழந்தை….
கிராமத்தில் புதிதாக திருமணம் முடிந்த மருமகளை சீக்கிரம் எனக்கு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடு என்று தன் மாமியார் சொல்லுவாள். கணவனுடைய அக்காள் தங்கச்சி எனக்கு ஒரு மருமகனையோ மருமகளையோ பெற்றுக் கொடு என்று… சொல்வார்கள்….
சீக்கிரம் குழந்தை பிறந்து அந்த குழந்தை என்ன வேலைக்கா போகப் போகிறது?? அது இல்லை காரணம்.
தன் மகனுக்கு ஏதோ கண் காணாத இடத்திலிருந்து பெண் எடுத்து திருமணம் முடித்திருப்பார்கள்..அந்தப் பெண் அம்மா அப்பா அண்ணன் தங்கை தம்பி எல்லோரையும் பிரிந்து இங்கு தனியாக வந்திருப்பாள்…
திருமணம் நடந்த வீட்டில் பத்து நாட்கள் கூடி வாழ்வார்கள் சந்தோஷமாக இருப்பார்கள் அண்ணன் தம்பி அக்கா பிள்ளைகள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்வார்கள் அப்போது அந்த பெண்ணுக்கு தனிமையில் இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்காது..
பத்து நாள் கழித்து அவரவர் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள் தன் கணவனும் வேலைக்கு சென்று விடுவான். அப்போது அந்த பெண் தனிமையில் இருக்கிறோம் என்று உணர்வாள்..
வேலைக்கு போன கணவன் இரவு தான் வருவான் மாமனார் மாமியார் வேலைக்கு சென்றுவிடுவார்கள் இந்த பெண் மட்டும் தனியாக இருப்பாள்…
அந்தப் பெண் தனிமையை உணரக்கூடாது என்பதற்காகத்தான் கல்யாணம் ஆன சீக்கிரத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
அந்தப் பெண் கர்ப்பமானால் அந்த கர்ப்ப காலத்தில் வாந்தி மயக்கம் சோர்வு எல்லாமே வரும் நான்கு மாசத்தில் அவர் வீட்டார் வருவார்கள் அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுப்பார்கள் ஆறு மாசத்தில் அறிவழம் போடுவார்கள்… பிறகு வளைகாப்பு இந்த நிகழ்வு நடக்கும்போது அந்தப் பெண் தனிமையாக இருப்பதை உணர மாட்டாள்..
பத்து மாதத்தில் அவளுக்கு குழந்தை பிறந்துவிடும் குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையை கவனிப்பதிலேயே அவள் கவனம் செலுத்துவாள் தனிமையாக இருக்கிறோம் என்று உணர மாட்டாள்…
இதற்குத்தான் கல்யாணம் ஆனவுடன் சீக்கிரம் குழந்தையை பெற்றுக் கொள் என்று சொல்வார்கள் அதன் காரணம் இதுதான்…
இப்போ உள்ள காலத்தில் கல்யாணமான சின்னஞ்சிறுசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் இரண்டு வருஷத்துக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார்கள்..
குழந்தை வேண்டாம் என்று நினைத்து எதை எதையோ பயன்படுத்தி சந்தோசமாக இருக்கிறார்கள்..
பிறகு நமக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்கும்போது குழந்தை தங்குவதில்லை அதற்கு பிறகு கோயில் குளம் ஆஸ்பத்திரி என்று அலைகிறார்கள் சில தம்பதிகள்….
தயவுசெய்து யாரும் குழந்தை இப்போது வேண்டாம் என்று தள்ளி போடாதீர்கள்
நீங்கள் குழந்தை வேண்டும் என்று நினைக்கிற போது குழந்தை கிடைப்பது குதிரைக்கும் கொம்பாகம்தான் இருக்குது இப்போ உள்ள காலகட்டத்தில்…




