குழந்தை வளர்ப்பதில் வித்தியாசம்..
குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பாருங்கள் அது என்ன ஆண் குழந்தை வேறு பெண் குழந்தை வேறு ???
முதல் குழந்தை பெண்ணா பிறந்து
இரண்டாவது குழந்தை வேண்டும் என்று நினைத்து இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தை பிறந்தது விடுகிறது
எங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என்று நினைத்தோம் பெண்ணாக பிறந்த விட்டாயே
அதுவும் கருப்பாக பிறந்து விட்டாய்
உன்னை எப்படி வளர்த்து ஒருவன் கையில் பிடித்து கொடுப்பது??
ஒரு பெண் குழந்தை கருப்பாக பிறந்துவிட்டால் அவள் குற்றமா என்ன அந்தக் குழந்தையை ஏன் ஒதுக்க வேண்டும்???
கருப்பாக பிறந்த குழந்தையை கருவாச்சி இங்க வாடி என்று சொல்வதும் அவளை ஒரு தீண்டத்தவாளாகபார்ப்பதும் எதற்காக??
ஆண் குழந்தைகள் என்று ஒரு கல்வி பெண் குழந்தைகளுக்கு என்று ஒரு கல்வி
ஆண் குழந்தையை ஆங்கில மொழியில் படிக்க வைக்கிறார்கள் பெண் குழந்தையை தமிழ் மொழியில் படிக்க வைக்கிறார்கள்..
ஏன் என்று கேட்டால் பெண் குழந்தை நமது வீட்டில் வாழப்போவதில்லை அவள் அடுத்த வீட்டில் தான் வாழ போகிறாள் அவளை எதற்கு ஆங்கில மொழியில் படிக்க வைக்க வேண்டும்??ஆனால் ஆண் குழந்தை நமது குழந்தை அவன் மட்டும் நல்லா படித்தால் போதும் கடைசி காலத்தில் அவன் தான் நம்மை நல்ல பார்த்துக் கொள்வான் என்று சிலர் நினைக்கிறார்கள்,..
இந்த மாதிரி பெற்றோர்கள் நினைப்பது தவறு அதாவது ஒருவனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அவன் தாய் தந்தையை சொல் பேச்சை கேட்பதைவிட தன் மனைவி சொல் பேச்சைத் தான் அதிகம் கேட்கிறார்கள் ஆண்கள்….
இது இயல்பான ஒன்று
நீ ஆங்கில மொழியில் படிக்க வைத்த உன் மகன் உனக்கு சோறு தண்ணி ஊத்த மாட்டான் உன்னை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவான்…
ஆனால் தமிழ் மொழியில் படித்த உன் மகள் உனக்கு சோறு தண்ணி கொடுத்து உங்களுடனே கூடவே இருந்து உங்களை பராமரிப்பாள் அதுதான் பெண் குழந்தைகள்…
குழந்தை வளர்ப்பதில் வேற்றுமை வித்தியாசம் பார்த்தது குழந்தைகளை வளர்க்காதீர்கள்….
எல்லோருக்கும் சரி சமமாக கல்வி கற்றுக் கொடுங்கள்….




