இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 07) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான டோனி ‘கேப்டன் கூல்’ என்ற அடைமொழியை பெற்றார். மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த சாதனை கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்கிறார்.




