தேனி: தேவதானப்பட்டியில் கடந்த ஜனவரியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக ஆட்டோ டிரைவர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியானது. அஜித்குமார் மரணத்தைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானதால் மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் விசாரித்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மதுரை மாவட்டத்திற்கும், சிறப்பு எஸ்.ஐ., சுயசம்பு, போலீசார் மாரிச்சாமி, பாண்டி, வாலிராஜன் ஆகியோர் மாவட்டத்திலுள்ள வேறு ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




