Oplus_131072
கை மற்றும் கால்களில் வளரும் முடிகளை அகற்ற இந்த 6 வழிகளை பின்பற்றுகள்..
மற்ற பராமரிப்புகளைப் போலவே சருமத்தில் உள்ள முடிகளை அகற்றுவதும் முக்கியமானதாக மாறிவிட்டது. கை கால்களில் வளரும் முடிகளை அகற்றுவதால் தங்கள் அழகை மேம்படுத்திக் காட்ட முயல்கின்றனர். அவ்வாறு முடிகளை அகற்றும்போது சில முறைகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றவில்லை எனில் மீண்டும் வளரும் முடிகள் கரடு முரடாக வளர ஆரம்பிக்கும். இதனால் முடிகளை அகற்றும்போது வலி உண்டாகும். சருமமும் சேதமடையும். எனவே முறையாக எப்படி முடிகளை அகற்றுவது என்று பார்க்கலாம்.
இந்த முடிகளை அகற்ற பார்லர் செல்வதை விட வீட்டிலேயே முயற்சிப்பது சௌகரியமாகவும் அதேசமயம் பணத்தை மிச்சப்படுத்த ஒரு வழியாகவும் இருக்கும். எனவே வீட்டிலேயே முடிகளை அகற்றுகிறீர்கள் எனில் இந்த வழிகளை பின்பற்றுகள்
வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்போலியன்ட் செய்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குங்கள்.
அடுத்ததாக வாரத்திற்கு ஒரு முறை கெமிக்கல் எக்ஸ்போலியன்ட் செய்யவும்
எக்ஸ்ஃபோலியேட்டிங் செய்த பிறகு உடனே மாய்ஸ்சரைசர் அப்ளை செய்வதை மறவாதீர்கள்.
நீங்கள் ஷேவ் அல்லது வேக்ஸ் செய்தால், முதலில் வெதுவெதுப்பான நீரில் ஈரம் செய்துகொள்ளுங்கள். பின் முடியை வளரும் திசையில் அகற்றவும். எதிர் திசையில் அகற்றக் கூடாது.
ஷேவ் அல்லது வேக்ஸ் செய்வதை விட லேசர் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்த வழி.
முடிகளை பிடுங்கும் முறையை தவிர்க்கவும். பாதுகாப்பான முறைக்கு மருத்துவரை அணுகவும்.




