கொடுக்காப்புளியில் இவ்வளவு பயன்கள் மறைந்துள்ளதா..?? கண்டிப்பா இதையெல்லாம் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்..!!
கொடுக்காப்புளியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை நம்மில் பலருக்கும் தெரியாது. கொடுக்காப்புளி என்றாலே நமது பள்ளிப் பருவம் தான் ஞாபகத்திற்கு வரும். குறிப்பாக 80 , 90ஸ் கிட்ஸ்க்கு கண்டிப்பா இந்த கொடுக்காப்புளி என்பது தெரியும். இந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒன்றுதான் இந்த கொடுக்காப்புளி. நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இந்த கொடுக்கப் புளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை கூறியுள்ளனர். அது என்னென்ன என்பதை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களின்
கருப்பை நோய்களுக்கு நல்ல மருந்து. சருமத்திற்கு பொலிவைத் தந்து முகப்பரு பிரச்சனைகளை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பித்தப்பை கற்களை கரைக்கும். உள் காயங்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகள் கொடுக்காப்புளியை உட்கொள்வது நன்மை பயக்கும். மூட்டு தேய்மானத்திற்கு நல்லது.




