கொண்டைக்கடலையையும் முட்டையும் வைத்து இந்த ரெசிபியை செய்து பாருங்கள்..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

நமது உடலுக்கு பல நன்மைகளை சேர்ப்பதில் கொண்டை கடலை ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இன்று அந்த கொண்டைக்கடலையை வைத்து முட்டை  பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
முட்டை – 3
கருப்பு கொண்டைகடலை – 100 கிராம்
மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு அதில் மூன்று முட்டைகளை உடைத்து உத்தவும்.

பிறகு சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். முட்டை உதிரியாக வந்த பின் கொண்டைக்கடலையை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். கடைசியாக கொத்தமல்லி தலையை தூவி இறக்கினால் சுவையான மற்றும் சத்தான கொண்டைக்கடலை முட்டை பொரியல் தயார்.

Read Previous

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! மக்களே உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

காலையில் எழுந்தவுடன் சுடுதண்ணீரை குடித்தால் எத்தனை நன்மைகள் தெரியுமா..!! அனைவரும் இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular