கோடை காலம் என்று வந்துவிட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வெயிலுக்குப் போக ஆசைப்பட மாட்டோம். இந்நிலையில் ஒரு சில குழந்தைகளை வெயிலுக்கு போக வேண்டாம் என்று சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்கள் விளையாடுவதில் தான் ஆர்வமாக இருப்பார்கள். இந்நிலையில் கோடைகாலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் குழந்தைகள் அதிக அளவு தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 கிலோ எடையுள்ள குழந்தை ஒரு லிட்டர் தண்ணீர் ஆவது பருகுவது அவசியமானது. மேலும் குழந்தைகள் அவர்களின் எடைக்கேற்ப தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும். கோடைகாலங்களில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. அது மட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு நீரில் ஊற வைத்து கழுவி கொடுக்க வேண்டும். செயற்கையான குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையான நுங்கு எலுமிச்சை ஜூஸ் மோர் மற்றும் பழங்கள் பயன்படுத்தி ஜூஸ்கள் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கோடை காலங்களில் சிக்கன் போன்ற சூட்டை கிளப்பும் மாமிசத்தை கொடுக்காமல் மீன் போன்ற இறைச்சிகளை கொடுக்கலாம். அதுமட்டுமின்றி கோடை காலத்தில் வெளியில் குழந்தைகளுக்கு உணவு வாங்கி தருவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.




