கோயிலில் நுழையும் போது கோயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன்..??.

Oplus_131072

#கோயிலில்_நுழையும் #போது_கோயில் #கதவைத்_தாண்டித் #தான் #செல்ல_வேண்டும் #என்று_குறிப்பிடுவது #ஏன்?….

அவர்கள் அவ்வாறு கூறுவதற்கான காரணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

□கோயிலில் நுழையும் முன்..

கோயிலில் நுழைவதற்கு முன்னர் ஆறு, குளம் அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கை மற்றும் கால்களை கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ள வேண்டும்.

கடவுளை வணங்குவதற்கு நம் உடலை தயார்படுத்திக் கொள்ள மேற்கண்டவாறு செய்ய வேண்டும். அடுத்ததாக, கோயிலுக்குள் நுழைவதற்கு முன், கோயில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாயிலில் காவலுக்காக நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.

□ வாயிற்படியை தாண்டினால் அர்த்தம்.

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கின்ற வாயிற்படியின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அந்த படியை தாண்டிச் சென்றால் நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதில் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோயிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று அர்த்தம்.

□வாயிற்படியை மிதித்தால் அர்த்தம்.

வாயிற்படியை தாண்டாமல் மேல் ஏறி, மிதித்து உள்ளே சென்றால், மனதில் இருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோயிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம்.

இறைவன் குடியிருக்கும் கோயில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.

Read Previous

நவகிரகங்களை வழிபடும் முறையும்.. அதன் பலன்களும்..!!

Read Next

தூக்கம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular