Oplus_131072
நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…!
கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான்.
ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.
மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா…
நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்… அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில்
ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது.
குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.
எனவே, இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.
கிரக வழிபாடும் பலன்களும்…
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
பலன் தரும் பாடல்
திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
நவகிரகங்கள் ஏற்படுத்தும் நோய்களும் எளிய பரிகாரங்களும். :
நமது வாழ்க்கை ஜாதகத்தில் உள்ள கிரக நிலையைப் பொறுத்துத் தான் அமைகிறது என ஜோதிடம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் மோசமாக இருந்தால் அவரின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. அது சரியாக, சிறப்பாக இருந்தால், அது வறுமையில் இருப்பவனைக் கூட ஒரு ராஜாவாக்குகிறது. இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், ஜாதகத்தில் மோசமான கிரக நிலையை சரியாக கண்டறிந்து நிவாரணமாக பரிகாரம், எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதால் அதிலிருந்து பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
சூரியன் மோசமாக அமைந்தால் என்ன நோய் ஏற்படும்?
சூரியன் மோசமாக அமைந்தால் என்ன நோய் ஏற்படும்?
sun related diseases astrology: நவகிரகங்களின் தலைவனான சூரியக் கடவுள் ஒவ்வொரு கிரகத்தின் பின்னால் சக்தியாக இருக்கிறது. சூரியன் ஒருவருக்கு மோசமாக அமையும் போது, எலும்புகள் மற்றும் கண்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதய நோய், காசநோய் மற்றும் செரிமான அமைப்பில் நோய்கள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
இப்படி சூரிய கிரகம் பிரச்னை தரும் போது அவர்கள் அதிகாலையில் எழுந்து சூரியனை வணங்குதலும். சூரிய நமஸ்காரம் செய்யலாம். கோதுமை கஞ்சியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கவும்.
ஜோதிட பாடம் : எந்த கிரகத்துடன் எந்த கிரகம் சேர்ந்தால் நன்மை அல்லது தீமை ஏற்படும்?
சந்திரன் தரும் நோய்கள் : Moon Planets and Diseases
சந்திரன் தரும் நோய்கள் : Moon Planets and Diseases
ஜாதகத்தில் சந்திரனின் குறைபாட்டுடன் இருக்கும் போது, அந்த நபருக்கு மனநோய்கள், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நபர் தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.
இப்படி சந்திரனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் இரவில் சந்திரனை வணங்கலாம். குறிப்பாக ஒவ்வொரு பெளர்ணமி அல்லது ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர, சிவனை வணங்குதலும், வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி சங்கிலியையும் அணியலாம். இது லாபகரமானதாக அமையும்.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமமா? பால் குடிக்க மறக்காதீங்க.
செவ்வாய்க் கிரகம் தரும் நோய்கள்: Mars Planets and Diseases
செவ்வாய்க் கிரகம் தரும் நோய்கள்: Mars Planets and Diseases
ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் கிரகம் பிரச்சினையைத் தரக்கூடியதாக இருந்தால் அந்த நபருக்கு இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பவர். அதுமட்டுமல்லாமல் இரத்தம் மற்றும் விபத்து சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது. இது உயர் மற்றும் தாழ்ந்த இரத்த அழுத்தத்திற்கும் காரணமாக அமைகிறது.
இதற்கு தீர்வாக செவ்வாய்க்கிழமைகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுங்கள். கட்டிலுக்கு பதிலாக தரையில் தூங்குவது நல்லது. முருகப்பெருமானை வணங்கி வருவது நல்லது.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? – அதற்கான பரிகாரமும், யாருக்கு தோஷம் இருக்கும்?
புதன் கிரகம் ஏற்படுத்தும் நோய்கள் : Mercury Planet and Diseases
புதன் கிரகம் ஏற்படுத்தும் நோய்கள் : Mercury Planet and Diseases
ஜாதகத்தில் புதன் கிரகத்தின் குறைபாடு இருந்தால், அது அந்த ஜாதகதாரருக்கு வாழ்க்கையில் தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில் புதன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறிக்கிறது. புதன் கிரக பிரச்னையால் தொற்று நோய்களும், காது-மூக்கு மற்றும் தொண்டை நோய்களுடன் தொடர்புடையது.
இதிலிருந்து நிவாரணம் பெற பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கீரைகள் உணவில் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளுங்கள். காலையில், வெறும் வயிற்றில் துளசி இலைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடுவது நல்லது. புதன் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும் நன்மை பயக்கும்.
புதன் தோஷம் விலகினால் வளமுடன் வாழலாம்!
வியாழன் (குரு) கிரகம் தரும் நோய்கள்: Jupiter Planets and Diseases
ஒருவரின் ஜாதகத்தில் குரு கிரகம் பிரச்னை தருவதாக இருந்தால் அந்த ஜாதகர் கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம். புற்றுநோய், ஹெபடைடிஸ் மற்றும் கடுமையான வயிற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதிலிருந்து நிவாரணம் பெற, காலையில் குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் கலந்து தண்ணீரில் குளிக்கலாம். குடிக்கும் நீரில் கூட சிறிது உணவில் சேர்க்கும் மஞ்சள் போட்டு குடிக்கலாம். ஆள்காட்டி விரலில் தூய தங்க மோதிரத்தை அணிந்துகொள்ளலாம். இது லாபகரமானதாக இருக்கும். மேலும், மஞ்சள் பொட்டை தவறாமல் வைத்துக் கொள்ளவும். விஷ்ணு சஹஸ்திரநாமத்தை படிப்பது புனிதமானது.
நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வது எப்படி? கிரக பலத்தை அதிகரிப்பது எப்படி?
சுக்கிர கிரகம் மோசமாக அமைந்தால்: Venus Planet Disease
சுக்கிர கிரகம் மோசமாக அமைந்தால்: Venus Planet Disease
ஜோதிடத்தின் படி, சுக ஸ்தானத்தின் அதிபதியாக சுக்கிரன் விளங்குகிறார். உடலின் வேதிப்பொருட்களை ஒழுங்குபடுத்தக் கூடியவர். ஆனால் சுக்கிர கிரகமே மோசமாக அமையும் போது ஹார்மோன்கள் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது கண்களையும் பாதிக்கிறது.
இதிலிருந்து நிவாரணம் பெற, மதிய உணவில் தயிர் சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி, சர்க்கரை மற்றும் மைதாவை குறைந்தபட்சம் சாப்பிடுங்கள். நிச்சயமாக விடியற்காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.
சுக்கிர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள் என்ன?
சனி கிரகம் தரும் குறைபாடு : Sani Planets and Diseases
சனி கிரகம் தரும் குறைபாடு : Sani Planets and Diseases
ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், பல வகையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டவர்கள் நீண்டகால நோய்களால் அவதிப்பட வாய்ப்பு உள்ளது. இது நரம்பு மண்டலம் மற்றும் வலியைத் தரக்கூடிய நோய் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சனி தோஷம் உள்ளவர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். உடலை சிறப்பாக பராமரிப்பது அவசியம். இவர்கள் சாத்விகமான உணவை அதாவது எப்போதும் எளிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்
இவர்கள் இருக்கும் இடத்தில் வாழ காற்றோட்டமான மற்றும் சுத்தமான வீடாக இருக்க வேண்டும். இரும்பு வளையம் கையில் அணிந்து கொள்ளலாம். காலையில் 9 மணிக்குள் சிறிது நேரம் அரச மரத்தின் கீழ் உட்கார்ந்து வரவும்.
ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் பிரச்னைகள் : Rahu Ketu Planets and Diseases
ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் பிரச்னைகள் : Rahu Ketu Planets and Diseases
ஒரு நபரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் மோசமாக இருந்தால், பல வகையான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். ராகு மர்ம நோய்களைத் தருபவர் என்று கூறப்படுகிறது. இந்த நோய்கள் ஆரம்பத்தில் சிறியவையாக பாதிப்பு குறைவாக இருந்தாலும் பின்னர் தீவிரமாகக் கூடியதாக இருக்கும். அதோடு நோய்களுக்கான காரணம் பெரும்பாலும் சரியாக புலப்படாததாக இருக்கும்.
ராகு கேது தோஷங்கள் விலக எளிய வழி இதோ – இயற்கையே உங்களை வாழ்த்தும்…
ராகு கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற, சந்தனத்தை அதிகம் பயன்படுத்துங்கள். சந்தனத்தின் வாசனையை எப்போதும் நீங்கள் நுகர்வது நல்லது. கழுத்தில் ஒரு துளசி மாலை அணிந்து கொள்ளுங்கள். எப்போதும் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரகாசமான நீல நிறத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
கேது கிரகத்தின் குறைபாடு இருந்தால், அந்த பிரச்னை ஏற்படக்கூடிய காலத்தில் தினமும் காலையில் குளிக்க வேண்டும். தொடர்ந்து ஆன்மிக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்.
நவக்கிரகங்கள் பாதிக்கும் முறை என்பது உங்கள் ஜாதகத்தில் அவற்றின் பலம், பலவீனம், அல்லது நீச்ச நிலையைப் பொறுத்து அமையும். சாதகமற்ற கிரக நிலைகள் நோய்கள், நிதி இழப்பு, மற்றும் பல்வேறு கஷ்டங்களுக்கு வழிவகுக்கலாம்.
இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, தொடர்புடைய தெய்வங்களை வழிபடுவது, குறிப்பிட்ட தானியங்களை தானம் செய்வது, மற்றும் பரிகார ஹோமங்கள் செய்வது போன்ற எளிய பரிகாரங்களைச் செய்யலாம்.
நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள்
சுகாதாரப் பிரச்சினைகள்:
ஒவ்வொரு கிரகமும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் அல்லது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். எடுத்துக்காட்டாக, சுக்கிரன் பலவீனமாக இருந்தால் ஹார்மோன் கோளாறுகள், நீரிழிவு, மற்றும் கண் பிரச்சினைகள் ஏற்படலாம்.
வாழ்க்கை தடை:
பலவீனமான கிரகங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்கள், தொழில் தடைகள், மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
நீச்சம்:
கிரகங்கள் நீச்சம் அடையும்போது (பலவீனமாக இருக்கும்போது) அவற்றின் எதிர்மறையான தாக்கங்கள் அதிகரித்து வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பரிகார முறைகள்
சம்பந்தப்பட்ட தெய்வங்களை வழிபடுதல்:
சூரியனுக்கு சிவனையும்,
சந்திரனுக்கு பார்வதியையும், செவ்வாய்க்கு சுப்ரமண்யரையும், புதனுக்கு விஷ்ணுவையும்,
குருவுக்கு தட்சிணாமூர்த்தியையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும்,
சனிக்கு சாஸ்தாவையும்,
ராகு, கேதுவுக்கு நவகிரகங்களையும் வழிபடுவது பலன் தரும்.
தானங்கள் செய்தல்:
ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நவதானிய தானங்களை தானம் செய்வது, குறிப்பாக பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு உளுந்து போன்றவற்றை தானம் செய்வது பாதிப்பைக் குறைக்கும்.
பரிகார ஹோமங்கள்:
நவகிரக பரிகார ஹோமங்களில் கலந்துகொள்வது கிரகங்களின் எதிர்மறை தாக்கங்களைக் குறைத்து நேர்மறை பலன்களைப் பெற உதவும்.
கோவில்களில் வழிபடுதல்:
நவகிரகங்களை வழிபடச் செல்லும்போது முதலில் அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு, பின்னர் நவகிரகங்களை 9 அல்லது ஒரு முறை சுற்றுவது சரியான முறையாகும்.
ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு விதமான பலன்கள், பாதிப்புகள் மற்றும் பரிகாரங்களைக் கொண்டுள்ளன.
உங்களுக்கு எந்த கிரகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்வது வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும்.
நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.
கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும்.
நவகிரகங்கள் :
பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும்.
ஒவ்வொருவருக்கும் பூர்வ புண்ணியத்தின் படி தான் உங்கள் ஜாதகத்தில் கிரக நிலை அமைந்திருக்கும். அனைத்து ஜாதகத்திலும் கிரகநிலை சாதகமாக அமைந்திருக்காது. இதன் விளைவாக தோஷங்கள் ஏற்படுகிறது, அதை நிவர்த்தி செய்ய மக்கள் கோவிலை நாடி செல்கின்றனர்.
நவகிரகங்களை வழிபடும் முறை:
முதலில் கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு விட்டு பிறகுதான் நவகிரகங்களை வழிபட வேண்டும். நவகிரகங்களை வழிபடுவதில் வலபுறம் இடபுறம் என குழப்பிக் கொள்ளாமல் மொத்தமாக ஒன்பது சுற்று சுற்றினாலே போதும் . அதேபோல் எந்த கிரகத்தையும் கையில் தொட்டு வணங்க கூடாது .
பலன்கள்:
ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு ஆற்றல் உண்டு .முறையாக வழிபாடும் போது அதன் பலனை நாமும் பெற முடியும் .அப்படி எந்த கிரகத்தை வழிபட்டால் நம் என்ன பலனை பெறுவோம் என தெரிந்து கொள்வோம் .
சூரிய வழிபாடு வாழ்வில் ஆரோக்கியத்தையும் மங்கலமும் பெற்று தரும்.
சந்திர வழிபாடு வாழ்வில் உங்களை புகழ்பெற செய்யும்.
செவ்வாய் வழிபாடு தைரியத்தை தரும்.
புதன் வழிபாடு நல்ல அறிவையும் ,தெளிவான சிந்தனையும் பெற்று தரும்.
குரு (வியாழன்) வழிபாடு புத்திர பாக்கியத்தையும் செல்வத்தையும் பெற்று தரும்.
சுக்கிர வழிபாடு வீடு நிலம் வாங்கும் யோகம், நல்ல வாழ்க்கை துணை ஆகியவற்றை கிடைக்கச் செய்யும்.
சனிபகவானை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
ராகு வழிபாடு பயணத்தால் நன்மையை ஏற்படுத்தி தரும்.
கேது வழிபாடு மோட்சம் தரும் ,ஞானம் பெருகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
மேலும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.
ஆகவே இனிமேல் நீங்கள் கோவிலுக்குள் செல்லும்போது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்று மனநிறைவோடும் முழு மனதோடும் வழிபடுங்கள்.




