கோழிக்கோடு அபுபக்கர் மறைவு: 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர் காலமானார்!

 

மேடைப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் என 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கோழிக்கோடு அபுபக்கர் (80) காலமானார். பக்கவாத பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இசை உலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அபுபக்கர், பாபுராஜ், தேவராஜன் மாஸ்டர் உள்ளிட்டோருடன் தபேலா கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் இசையமைப்பாளராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். கே.ஜே.யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் அவரது இசையில் பாடியுள்ளனர். அவரது உடல் இன்று செப். 1ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள மத்தோட்டம் ஜும்ஆ மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இசைப் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

Read Previous

“அவசியமில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்!” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Read Next

கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10% உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular