நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக பதிவானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
அவசியமான தேவைகளைத் தவிர மற்ற நேரங்களில் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளுக்கு பொழுதுபோக்கு பயணம் செல்வதையும், வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறு தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தேவையற்ற வெளிநாட்டு செலவுகளை குறைத்து உள்நாட்டு பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாக உள்ளது.




