சூப்பரான கோழி உப்பு வறுவல் செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

செய்முறை:

 

முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்

 

பின்பு கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்

 

பின் அதில் வரமிளகாயைப் போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

 

பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்

 

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்

 

வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்

 

சிக்கன் நன்கு வெந்ததும் மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கோழி உப்பு வறுவல் தயார்.

Read Previous

உளுந்தங்கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Read Next

ரோட்டு கடைகளில் கிடைப்பது போன்று மசாலா சுண்டல் வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular