சகல நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினி இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

சத்துகள் நிறைந்த சாத்துகுடி சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.

சாத்துகுடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துகுடியில், நார்சத்து நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்தவேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால்தான், நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது.

ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி, உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. சாத்துகுடி பழமா? என சாதாரணமாக கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது.

Read Previous

100 தடவை பாம்பு கடித்தாலும் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! எந்தவித உயிரிழப்பும் வராது..!!

Read Next

ஒரு கிராம்பு மட்டும் போதும்.. கெட்ட கொலஸ்ட்ராலை ஈசியாக குறைக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular