Oplus_131072
தினமும் ஒரு கிராம்பு எடுத்துக்கொள்வது ரத்தத்தில் ஆரோக்கியமான லிப்பிட் அளவுகளைப் பராமரிக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கிறது.
வலிமையான வாசனை மற்றும் பல்வேறு உடல் நல பலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் கிராம்பு குறிப்பாக இதயம் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக அமைந்துள்ளது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் யூஜனால் போன்ற பயோ-ஆக்டிவ் காம்பவுண்டுகள் இருப்பதன் காரணமாக கிராம்பு எடுத்துக்கொள்வது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கிறது.
தினமும் ஒரு கிராம்பு எடுத்துக்கொள்வது ரத்தத்தில் ஆரோக்கியமான லிப்பிட் அளவுகளைப் பராமரிக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கிறது. எனவே, இந்தப் பதிவில் கிராம்பு சாப்பிடுவது கொலஸ்ட்ராலை எப்படி குறைக்கிறது, இதய ஆரோக்கியத்திற்கு எந்த வழியில் நன்மை தருகிறது மற்றும் அதனை அன்றாட உணவில் சேர்ப்பதற்கான வழிகள் யாவை என்பதை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
கிராம்பு இதய ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை தருகிறது?:
கிராம்பில் யூஜனால் என்ற பயோ-ஆக்டிவ் காம்பவுண்ட் காணப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட், வீக்க எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரி எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இதய நோய்க்கு முக்கிய காரணியாக அமையும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்க இந்த காம்பவுண்டுகள் உதவுகின்றன. அதேபோல ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவுகளைச் சீராகப் பராமரித்து, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ரத்தநாள இறுக்கம், ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதங்களுக்குக் காரணமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இந்த கிராம்பு உதவி புரிகிறது.
தினமும் ஒரு கிராம்பு எடுத்துக்கொள்வதால் இதயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள்:
*கிராம்பை எடுத்துக்கொள்வது மொத்த கொலஸ்ட்ரால் அளவையும், LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கிராம்பில் உள்ள வீக்க எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளாகும்.
*கிராம்பு மற்றும் இஞ்சியை ஒன்றாகச் சேர்த்து எடுத்துக்கொள்வதால் மொத்த கொலஸ்ட்ரால் மற்றும் LDL கொலஸ்ட்ரால் குறைப்பதாக விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான லிப்பிட் அளவுகளைப் பராமரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் கிராம்பு உதவுவதாக இந்த ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.
*கிராம்பில் முதன்மையாகக் காணப்படும் யூஜனால் என்ற ஆக்டிவ் காம்பவுண்ட் LDL கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷன் அடையாமல் தடுக்கிறது. ஏனெனில் ஆக்ஸிடேஷன் செய்யப்பட்ட LDL காரணமாக பிளேக்குகள் உருவாகி, அதனால் இதய நோய்கள் ஏற்படலாம். மேலும் அன்றாட உணவில் கிராம்புகளைச் சேர்த்துக் கொள்வது ரத்த நாள இறுக்கத்திற்கு எதிராகப் பாதுகாப்பு தருகிறது.
தினமும் கிராம்பு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
-ஆர்தரைட்டிஸ் மற்றும் மெட்டபாலிசம் கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்கள் வீக்கத்தின் காரணமாக ஏற்படுகின்றன. கிராம்பு எடுத்துக்கொள்வது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
-மேலும் கிராம்பு இரத்த சர்க்கரை அளவு சீராக்க உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-பாரம்பரியமாக கிராம்பு வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான அசௌகரியத்தைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
-வலி நிவாரண மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் இயற்கையாகவே கிராம்புகளில் காணப்படுகிறது. இதனால் இது பல் வலி மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
-ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து செல்களைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
அன்றாட உணவில் கிராம்பை எப்படி சேர்க்கலாம்?
*கிராம்பு தேநீர் தயாரித்துப் பருகலாம்.
*வழக்கமாக செய்யும் குழம்பு, சூப் வகைகள், ஸ்மூத்திகளில் கிராம்பு சேர்த்து சாப்பிடலாம்.
*ஒரு சில துளிகள் கிராம்பு எண்ணெயைச் சமைக்கும் போது பயன்படுத்தலாம்.
முக்கியமான குறிப்பு:
மிதமான அளவில் கிராம்பு எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும் கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் இரைப்பை குடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கிராம்பு எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மேலும் வேறு எந்த விதமான நோய்கள் இருக்கும் நபர்கள் தினமும் கிராம்பு எடுப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.




