சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! இந்து சமய அறநிலையம், சட்டத்துறைக்கு மானியக் கோரிக்கை!

 

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.21) இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.

 

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மற்றும் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளனர்.

 

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிலளிக்கிறார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்ளார்.

 

இதனால் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் இரு துறைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

“கம்யூனிஸ்ட்டுகளை தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா?” – சிபிஎம் சண்முகம் கேள்வி!

Read Next

மனைவி மீது சந்தேகம்.. மனைவி, தங்கையை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular