வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அன்றாட வாழ்க்கையில் சத்தான உணவுகளை பின்பற்றுவதை நாம் தவிர்க்கிறோம். அந்த வகையில் 15 நிமிடமே போதும் இந்த சாலட் ரெடி பண்ண. இதை எப்படி செய்வது என்று கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வருத்த வேர்க்கடலை- அரை கப்
முளையிட்ட பாசிப்பயிறு- ஒரு கப்
தக்காளி-1
பெரிய வெங்காயம்-1
பொடியாக நறுக்கிய மல்லித்தழை-சிறிதளவு
பச்சை மிளகாய்-1
துருவிய இஞ்சி-சிறிதளவு
எலுமிச்சை சாறு- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முளையிட்ட பயிரை மிகவும் குழைந்து விடாமல் வேக வைக்கவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை முலைப்பயிறு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தலை உப்பு எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். பின்பு தேவையான அளவு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் நம்மளுக்கு சுவையான சாலட் ரெடி. இதை டீ அல்லது காபியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.




