அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’, வெறும் 4 நாட்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும், 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று இணையத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக ஊடக இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்” என்று விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உருவான இவ்வியக்கத்திற்கு போட்டியாக, தற்போது ‘தேசிய ஒட்டுண்ணி முன்னணி’ என்ற எதிர்க்கட்சி தளமும் தொடங்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




