Oplus_131072
சமைக்கும்_முன்
எண்ணெயில்‼️
கடுகு_போட்டு தாளிப்பது_ஏன்⁉️
இவ்வளவு நாள் இந்த சமாச்சாரம் தெரியாமல் இருந்து
விட்டோமே‼️
அம்மா சமையல் செய்யும் போது மட்டும் கடுகு தாளிச்சு, பிறகே சமையல் செய்யிறாங்க.
ஏன் அப்படி செய்யணும்⁉️
வெறுமனே சமைத்தால் நல்லா இருக்காதா⁉️என்ற குழப்பம் என்னை தொற்றிக்
கொண்டது.
சல்ஃபர்‼️
அதிகம் காணப்படும் ஒரு பொருள் கடுகு.
சல்ஃபர் தாது உடலுக்கு ரொம்ப அவசியமாம்.
இறைச்சி, பால், மீன், பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் சல்ஃபர் அதிகம் இருக்கும். அசைவ பழக்கம் இல்லாதவர்களுக்கு பால், பூண்டு, வெங்காயம் போன்றவை மட்டுமே சல்ஃபருக்கான ஒரே ஆதாரம்.சைவ பழக்கமுடைய இன்னும் சிலர், பூண்டு, வெங்காயம் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பால் குடிப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்ப்படுத்தும். அப்படிப்பார்த்தால், சல்ஃபர் உடலுக்கு கிடைக்காமலேயே போய்விடும்.ஆக எல்லா தரப்பினருக்கும், சல்ஃபர் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால் கடுகு மட்டுமே ஒரே ஆதாரமாகும். யாராக இருந்தாலும், உடலுக்கு ஒத்துப்போகும், ஒவ்வாமை ஏற்ப்படுத்தாது.சல்ஃபர் எந்த பொருளிலிருந்தும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, சிறிதளவு கடுகு தாளிப்பதில் அது கிடைத்து
விடுகிறது.உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஜீரண சக்தியை மேம்படுத்துவது வரைக்கும் துணை புரிகிறது. இப்போது புரிந்திருக்க வேண்டுமே, கடுகின் முக்கியத்துவம்.




