சமையலறையில் தீ விபத்தை தவிர்க்க இந்த விஷயங்களை கவனியுங்கள்..!!

சமையலறையில் கேஸ் ஸ்டவ் அருகில் பிளாஸ்டிக் டப்பாக்கள், சமையல் எண்ணெய் பாட்டில்கள், பேப்பர்கள் மற்றும் துணிகள் போன்ற பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டவ்விலிருந்து வெளியாகும் வெப்பம் மற்றும் தணல் காரணமாக இவை எளிதில் தீப்பற்றி, பெரிய அளவிலான விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

மேலும், மிக்ஸி, செல்போன் சார்ஜர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆயில் ஸ்ப்ரே கேன்களையும் கேஸ் ஸ்டவ் அருகில் வைக்காமல் இருப்பது நல்லது. சமையலறையில் சிறிய கவனக்குறைவும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், எப்போதும் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை ஒழுங்காக வைப்பது அவசியம்.

Read Previous

ஆப்பிளா?.. வாழைப்பழமா?.. இரண்டிலும் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன?..

Read Next

கருவாடு சாப்பிடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular