சமையல்காரருக்கு சம்பளம் இவ்வளவா..!! அம்பானி வீடு என்றால் சும்மாவா..!!

தற்போது நடந்த திருமணங்களில் மிகவும் பிரமாண்டமாக மட்டுமின்றி அனைத்து சினி உலகத்தினரையும் அழைத்து நடத்தப்பட்ட திருமணம் தான் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் .

உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இத்திருமணத்திற்கு முகேஷ் அம்பானிக்கு இந்திய மதிப்பில் 5000 கோடி செலவாகியுள்ளதாம். ஆனால் அது அவருக்கு 0.5% அமௌன்ட் மட்டும் தானாம். எத்தனை பெரிய சொத்திற்கு சொந்தக்காரராக இருந்தாலும் உணவு என்பதில் சாதன மனிதர்களை போலவே தான் அம்பானி குடும்பத்தினர் சாப்பிடுவதாக தெரிய வந்துள்ளது .

அம்பானி குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகமாக சைவ உணவே எடுத்து கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது ஆரோக்கியத்தின் மீது உள்ள காதலால் அம்பானி குடும்பத்தில் அனைவரும் சைவ உணவே விரும்பி உண்பர்களாம். உணவுக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் அம்பானி சமையல் காரர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

இந்த வகையில் பார்க்கும் பொழுது அம்பானி வீட்டில் ஆன்டிலியாவில் இருக்கும் சமையல் காரருக்கு மாதம் 2 லட்சம் வைத்து வருடத்திற்கு 24 லட்சம் வழங்கப்படுகிறது . அம்பானி வீட்டில் உள்ளவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதில் பருப்பு, இட்லி, சப்பாத்தி அடங்குமாம். அம்பானி வீட்டின் ஓட்டுனருக்கு கூட மாதம் 2 லட்சம் சம்பளம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

Read Previous

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! மாவட்டங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

Read Next

அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து தூதுவளை அடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular