Oplus_131072
சர்க்கரை நோயாளியா நீங்க? அப்போ கண்டிப்பா இந்த அரிசியை சாப்பிடுங்க!!
#ரத்தக்_கொதிப்பு, #சர்க்கரை_நோய், நரம்புகளைப் பலப்படுத்துதல் போன்ற மருத்துவ குணம் கொண்டது பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் அரிசி வகை.
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம். இந்த அரிசியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இது குறித்து செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் விவசாயிகள் பலவிதமான நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாரம்பரிய நெல் ரகங்களை வாங்குவதிலும் பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் சிறந்த பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான காட்டுயானம் தனித்துவமானது. காட்டு யானம் அரிசி விளையும் இடங்களில் யானை நுழைந்தாலும் தெரியாத அளவுக்கு உயரமாக வளரும் என்பதால் இதற்கு “காட்டுயானம்” என்று பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு.
எல்லா அரிசி வகைகளும் ஆரோக்கியமானவை என்றாலும் அவை மெருகூட்டப்பட்டு தவிடு அகற்றப்படுவதால் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் முற்றிலும் இழக்கப்படுகின்றன. ஆனால் பாரம்பரிய அரிசியை அப்படியே எடுத்துக் கொள்வதால் அதன் முழு சத்தும் கிடைக்கும். அந்த வகையில் காட்டுயானம் அளிக்கும் மிகச்சிறந்த நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
காட்டுயானம்: இந்த நெல் ரகம் 7 அடி வரை உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும் நெல் மணிகள் கொத்துக் கொத்தாக வளரும். இதன் வயது 180 ஆகும். இந்த நெல் ரகத்தை நேரடி விதைப்பு, நாற்றங்கால் விதைப்பு, ஒற்றை நாற்று முறை போன்று மூன்று முறைகளில் பயிர் செய்யலாம்.
நேரடி விதைப்பு முறையை எடுத்துக் கொண்டால், வறட்சியும் தாங்கி நன்றாக வளரும். நல்ல தண்ணீர் வசதி இருந்தால் நாற்றங்கால் முறையைத் தேர்வு செய்யலாம். காட்டுயானத்தின் உயரம் குறைத்து நன்றாகப் பயிர் செய்ய வேண்டுமென்றால் ஒற்றை நாற்று முறையைத் தேர்வு செய்யலாம்.
ஆடி பட்டத்தில் விதைத்தால் ஆவணி பட்டம் வரை வளர்ந்து தை மாதத்தில் அறுவடை செய்யலாம். புரட்டாசி மாதத்திலும் இந்தப் பயிரை நடவு செய்யலாம். சரியாக மாசி மாதத்தில் அறுவடை செய்து விடலாம். இந்த இரண்டு பட்டத்தைத் தவிர்த்து முன் பின் பயிரிட்டால் சரியான வளர்ச்சி இருக்காது.
ஏக்கருக்கு 5 கிலோ வரை விதை நெல் தேவைப்படுகிறது. 18 நாட்களில் நாற்று தயாராகிவிடும். ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 165 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்கு உரங்கள் தேவையில்லை. அதிக செலவும் இருக்காது எனச் சொல்லப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 20 லிருந்து 25 மூட்டை நெல் கிடைக்கும் எனவும், களை எடுப்பது குறைவு, மழை, வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது என்பதாலும், நெற்பயிரின் தண்டு, இலை பகுதி வீரிய வளர்ச்சியுடன் உள்ளதால் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ பயன்கள்: நார்ச்சத்து நிறைந்தது என்பதால் இது மலச்சிக்கலைத் தடுக்க அல்லது நிவாரணம் அளிக்கச் செய்யும். இந்த ரக அரிசி எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடல் நலத்தைக் காக்கும் வலிமையுடையது. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், நரம்புகளைப் பலப்படுத்துதல் போன்ற மருத்துவ குணம் கொண்டது.
குறிப்பாக காட்டுயானம் உடலில் குளுக்கோஸ் முறிவைக் குறைக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. சிறு வயது முதல் இந்த அரிசி வகைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு நோயைத் தடுக்கச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயை உருவாக்கும் செல்களைத் தடுக்கவும் இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது. காட்டுயானம் அரிசியில் புட்டு, அடை, தோசை, இட்லி போன்றவற்றைச் செய்யலாம். வாரம் இரண்டு முறை அரிசி உணவாகச் சேர்த்து வரலாம்.




