சளி இருமலுக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்..!!

Oplus_131072

சளி இருமலுக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்…………

முதலில் வெற்றிலை மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதேசமயம் புளியை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் கடுகு போடவும், பின் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள், தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் பருப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர்

சேர்த்துக் கொள்ளுங்கள். அவை நன்கு கொதிக்க வேண்டும். அதேசமயம் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின் தனியா தூள் மிளகு, சீரகப்பொடி ஆகியவற்றை நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

பின் அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து அடுப்பை

அணைக்கவும், உடனே நறுக்கி வெற்றிலையை இவற்றில்

சேர்த்து மூடி வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் அப்படியே

விட்டு விடுங்கள்.

சூப்பரான வெற்றிலை ரசம் தயாராகிவிட்டது, பின் சூடான சாதத்துடன் ஊற்றி சாப்பிடுங்கள். இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்….

 

Read Previous

மனைவி மற்றும் கள்ளக்காதலன் தலை துண்டித்து கொலை.. கணவர் கொடூரம்..!!

Read Next

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா?.. இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular