சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏற்கனவே சீர்காழியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்திருந்தார். தற்போது சங்கரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
சங்கரின் உயிரிழப்பு தமிழக மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சவுதி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.




