பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் வருகிறது. கடந்த வார நாமினேஷனில் வெறும் 6 பேர் மட்டுமே நாமினேட் ஆன நிலையில், இந்த வார நாமினேஷனுக்கு 10 பேர் நாமினேட் ஆகி போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் luxury பட்ஜெட் டாஸ்கில் ஆண்களுக்கு பதில் தர்ஷா குப்தா உணவு பொருட்களை தேர்வு செய்ய கிளம்பினார்.
தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில், சமையல் செய்ய தேர்வு செய்த இரண்டு நபர்களையே பாத்திரமும் கழுவ வேண்டும் என்று ஆண்கள் அணியினர் டாஸ்க் கொடுத்துள்ளனர். இதனால் கொந்தளித்த பெண்கள் “ஒரு வாரம் முழுவதும் எப்படி நாங்களே எல்லா வேலையும் பாக்குறது” என்று ஆண்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். “இதுதான் டாஸ்க் பண்ண முடிஞ்சா பண்ணுங்க” என்று முத்துக்குமாரன் சொன்னதுக்கு, “மனசாட்சியே இல்லையா உங்களுக்கு” என்று சாச்சனா அழுதுகொண்டே கூறுகிறார். மேலும், அதற்கடுத்து என்ன நடந்தது என்று இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் விரிவாக காணலாம்.




