சாணக்கிய நீதி ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய ஐந்து குணங்கள் என்னென்ன தெரியுமா : உங்கள் மனைவி கிட்ட இருக்கா..!!

சாணக்கியர் இந்திய வரலாற்றில் சிறந்த ராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவர் அவரின் சாணக்கிய நீதியும் அர்த்த சாஸ்திரமும் சாணக்கியரின் ஆழ்ந்த புலமைக்கு சான்றாகும்..

ஒரு பெண்ணுக்கு தேவையான என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் ஒரு பெண்ணை திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக்குகின்றன என்பதை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அவை என்னவென்று பார்ப்போம்..

புத்திசாலித்தனம் : அனைத்து பெண்களிடமும் அவசியம் இருக்க வேண்டிய குணம் புத்தி கூர்மையாகும் புத்திசாலி மனைவி மிகவும் சதுர்த்தியமான முடிவுகளை எடுத்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் கொண்டு வருவார்கள் அத்தகைய மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் முன்னேற்றம் அடைந்த வாழ்க்கை கொடுப்பார்கள்..

நிர்வாக திறமை : நிர்வாக திறமை நிதி மற்றும் முடிவு எடுப்பதில் சிறந்து விளங்கும் மனைவிகள் குடும்பத்தை நல்வழிப்படுத்துவர்களாக இருப்பார்கள் இந்த குணமுள்ள பெண்கள் சமூகத்தில் அவர்களின் குடும்பத்தை தலைநிமிர் வைப்பார்கள் இப்படிப்பட்ட மனைவிகள் கிடைப்பது கனவுகளுக்கு ஆறுதலையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்..

இனிமையாக பேசுவது : அன்பாகவும் மரியாதையாகவும் பேசும் மனைவிகள் கணவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும் திருப்தியும் அளிப்பார்கள் மனைவியின் ஆறுதலான வார்த்தைகள் எந்த ஒரு நெருக்கடியில் இருந்தும் வெளிவர கணவன்மார்களுக்குஉதவும், அவர்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரால் மிகவும் விரும்பப்படுவார்கள்..

விசுவாசம் : நல்லொழுக்கம் மற்றும் விசுவாசமிக்க மனைவி தன் கணவனையோ அல்லது குடும்பத்தையும் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார். அவர்கள் எப்போதும் தங்கள் கணவருக்கு நம்பிக்கை உரியவராகவும் பணிவாகவும் இருப்பார்கள் மேலும் அவர்கள் மனமும் உடலும் தூய்மையானவர்களாகவும் நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்..

ஆதரவு : இது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும் முக்கிய விஷயம் என்னவென்றால் தங்கள் கணவருக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும்போது சரியான நேரத்தில் மனரீதியாகவும் முதல் ரீதியாகவும் ஆதரவளிப்பது இது வெற்றிகரமான திருமணத்திற்கு அடிப்படை என்று சாணக்கியர் கூறுகிறார் குழந்தைகளை பற்றியோ அல்லது குடும்பத்தில் மற்ற விஷயங்களை செய்வதாகட்டும் அது கணவரின் பொறுப்பு மட்டுமல்ல என்பதை அவர் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்..

நேர்மை : ஒரு சிறந்த மனைவி திருமணத்தில் எப்போதும் நேர்மையாக இருப்பார். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த குணங்கள் மற்றும் நல்ல மதிப்புகளை கொண்டிருப்பார் அவர்களின் ஒவ்வொரு செயலும் தர்மத்தின் அடிப்படையில் அமையும் இந்த குணங்களைத் தவிர மனைவி தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கருத்து கூறுகிறது மேலும் பொறுமை அவர்களின் முக்கிய குணங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்..!!

Read Previous

நிரந்தர நரை முடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை ஹேர் டை : எப்படி தயாரிப்பது..!!

Read Next

ஷாக் : நீங்க பாக்கெட் பாலை கொதிக்க வைத்து குடிப்பவரா அப்ப இது தெரிஞ்சுக்கோங்க ‌..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular