இந்தோனேசியாவில் நடுக்கடலில் தீப்பிடித்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

 

 

இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் உள்ள படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் சென்ற படகில் நடுக்கடலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

 

லெம்பக் ஜலசந்தி பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது தீப்பற்றியதால், பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

தீ விபத்தில் சிக்கிய 172 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Read Next

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular