பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) உடல்நல குறைவால் காலமானார். கடந்த சில காலமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்ட அவர், 2023-ம் ஆண்டோடு நடிப்பதை நிறுத்தினார். தமிழில் ‘சாமி’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர், எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 750 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் அவரின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




