சாஸ்திரம் சொல்லுகிறது எந்த நாள் எதை செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்று.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
சாஸ்திரம் சொல்லுகிறது எந்த நாள் எந்த தவறு செய்தால் என்ன விளைவு ஏற்படுகிறது என்று. ஞாயிறு கிழமைகளில் இரும்பு சார்ந்த பொருள் வாங்கக்கூடாது. இதனால் வீட்டின் அமைதி கெடும். உறவு விலகும்.
திங்கள் கிழமை அன்று சாவுதுக்கம் விசாரிக்க கூடாது. இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல.
செவ்வாய்க்கிழமையன்று பெண்கள் அணிந்துள்ள நகையை கழட்டுவதோ கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டின் செல்வ வளம் மறையும்.
புதன்கிழமை அன்று கண் சிகிச்சை செய்யக்கூடாது. இதனால் பாதிப்பு அதிகரிக்கும்.
வியாழக்கிழமை அன்று பித்ரு நிந்தனை கூடாது குலசபத்தை உண்டாக்கும். வெள்ளிக்கிழமை அன்று கண் திருஷ்டி சுத்தக்கூடாது வீட்டிலிருந்த மகாலட்சுமி விலகி செல்வார். சனிக்கிழமை அன்று கடன் வாங்க கூடாது இதனால் தரித்திரம் உண்டாகும்.




