பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை, ஜர்தா, உற்பத்தி செய்யப்படாத புகையிலை மற்றும் பீடி ஆகியவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சிகரெட்டுகள், பிரீமியம் மதுபானங்கள் மற்றும் உயர் ரக கார்கள் ஆகியவற்றை அதிக வரியின் கீழ் வைத்திருக்கும் வகையில், ஆடம்பரப் பொருட்களுக்கு புதிய 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் புகையிலை உற்பத்தி நிறுவன பங்குகள் சரிய வாய்ப்புள்ளது.




