சிக்கன்ல பல வெரைட்டி சிக்கன் செஞ்சு பார்த்திருப்போம். ஆனா இந்த மாதிரி மட்டும் சிக்கன்ல செஞ்சு கொடுங்க உங்க வீட்ல இருக்க எல்லாரும் மறுபடி இதை எப்ப செய்வ அப்படின்னு கேட்டுட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். அது எப்படி பண்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
முதல்ல அடுப்பை பத்த வச்சுக்கோங்க. அடுத்து ஒரு பாத்திரத்தை வச்சு அதுல ஒரு நாலு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊத்திக்கோங்க. எண்ணெய் நல்லா காஞ்சதும் அதுல கரம் மசாலா பொருட்கள் ஆனா பிரியாணி இலை சோம்பு பட்ட லவங்கம் இதெல்லாம் ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து ரெண்டு பெரிய வெங்காயத்தை நீள நீளமா கட் பண்ணி ஆட் பண்ணிக்கோங்க. வெங்காயம் நல்லா வதங்கி பிரவுன் கலர்ல வரணும். அடுத்து ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கோங்க. இது வதங்கிட்டு இருக்க கேப்லையே ஒரு பத்து சின்ன வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜார்ல சேர்த்து அதுல ஒரு கைப்பிடி அளவு புதினா ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நல்லா அரைச்சு அதையும் இதுல ஆட் பண்ணிக்கோங்க. ஆட் பண்ணி நல்லா என்ன திரிஞ்சு வர அளவுக்கு வதக்குனதுக்கு அப்புறமா மூணு தக்காளி நீட் நீட்டமா கட் பண்ணி ஆட் பண்ணி தேவைக்கேற்ப உப்பும் ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து தக்காளி நல்லா வதங்குனதுக்கு அப்புறமா சிக்கன் மசாலா ரெண்டு டேபிள் ஸ்பூன் வரமிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப கஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் ஆட் பண்ணி நல்லா கலந்து விட்டுருங்க. அடுத்து எண்ணெய் நல்லா திரிஞ்சு வர்ற சமயத்துல ஒரு மூணு ஸ்பூன் தயிர நல்லா அடிச்சு சேர்த்துக்கோங்க. அடுத்து அரை கிலோ சிக்கன் நல்லா வாஷ் பண்ணி சேர்த்து நல்லா வேக வச்சு எடுத்தா சுவையான சிக்கன் கிரேவி ரெடி. இத நீங்க சப்பாத்தி, பூரி ,புரோட்டா ,இட்லி, தோசை ,சாப்பாடு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். அம்புட்டு ருசியா இருக்கும்.




