ஜாதிக்காயை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
ஜாதிக்காய் என்பது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. குறிப்பாக இந்த ஜாதிக்காய் சுலபமாக அனைத்து கடைகளில் எல்லாம் கிடைக்காது. நாட்டு மருந்து கடைகளில் மட்டும்தான் இந்த ஜாதிக்காய் கிடைக்கும். அந்த அற்புதமான ஜாதிக்காயில் எக்கச்சக்கமான நன்மைகள் கொட்டி கிடைக்கிறது அது என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டு மூலிகை ஜாதிக்காய் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு அற்புதமான நிவாரணையாக இருக்கிறது. ஏனென்றால் பெண்கள் ஜாதிக்காயை அரைத்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது தேனை கலந்து பேச்சு செய்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாக இருக்கும். மற்றும் இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. மற்றும் இந்த ஜாதிக்காய் காய்ச்சலை குணப்படுத்துகிறது. குறிப்பாக இருமல் சளி போன்றவற்றை குணப்படுத்த இந்த ஜாதிக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கிய மருந்துகளில் இந்த ஜாதிக்காயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அழகான பொலிவான முகத்தை பெறுவதற்கு இந்த ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவலாம் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பொடி வாங்கி அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆட் பண்ணி கலந்து முகத்தில் தடவுதல் மூலம் முகம் பொலிவாகவும் அழுக்குகள் இல்லாமலும் இருக்கும்.
குறிப்பு:
கர்ப்பிணி பெண்கள் ஜாதிக்காயை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.




