சிங்க ராஜா – அமைச்சர் தேர்வு..!! அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு மிகப்பெரிய காட்டுல ஒரு சிங்க ராஜா குடும்பம் இருந்துச்சு , அங்க இருந்த மத்த விலங்குகளை ஆட்சி செய்யுறது அந்த குடும்பம்தான் ,அந்த குடும்பத்தோட மூத்தவரான சிங்க ராஜாவுக்கு வயசாகிடுச்சு ,அதனால தன்னோட மகன சிங்க ராஜாவா நியமிக்க நினைச்சாரு

அதனால அரசவைய கூட்டி ,யானை மந்திரி கிட்டயும் ,நரி மந்திரிகிட்டயும் தன்னோட முடிவ சொன்னாரு

அத கேட்ட நரி மந்திரி அரசே முதல்ல அவருக்கு அனுபவம் வேணும் அதனால் இப்பவே அவருக்கு ரெண்டு மந்திரிங்கள தேர்வு செஞ்சு அவுங்களோட காட்டோட அடுத்த பகுதிக்கு அனுப்புங்க அப்பத்தான் வயசானவங்களோட அறிவும் அனுபவமும் அவருக்கு கிடைக்கும்னு சொல்லுச்சு

அதுக்கு யானை மந்திரி சொல்லுச்சு அரசே புது அரசருக்கு நல்ல மந்திரிகள தேர்வு செய்யுறது உங்களோட வேலை,நீங்க எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு நிக்கவச்சு அம்பு விடணும் அந்த அம்பு யார் முன்னாடி விழுகுதோ அவுங்கதான் புது மந்திரிங்கனு சொல்லுச்சு .

இத கேட்ட வயசான சிங்க ராஜா புது மந்திரி தேர்வு செய்ய எல்லா மிருகங்களையும் கூப்பிட்டாரு ,அரசரோட அறிவிப்பு வந்ததும் மந்திரி தேர்வுக்கு ஆச பட்ட எல்லா மிருகங்களும் அங்க வந்து வரிசையா நின்னுச்சுங்க

உடனே வயசான சிங்க ராஜா ஒரு வில்ல எடுத்து அம்பு விட்டுச்சு ,அது அங்க இருந்த தவளை முன்னாடி விழுந்துச்சு ,இத பார்த்த எல்லா மிருகங்களுக்கும் ரொம்ப அதிர்ச்சியா போச்சு ,அரசர் விட்ட அடுத்த அம்பு அங்க இருந்த ஆமையோட காலுக்கு முன்னாடி விழுந்துச்சு ,

நம்ம அப்பாவோட அமைச்சர்களான யானை மந்திரி ,நரி மந்திரி மாதிரி நல்ல மந்திரிகள் தனக்கு கிடைப்பாங்கனு ஆசையோட நின்னுகிட்டு இருந்த குட்டி சிங்கம் அதிர்ச்சியாகிடுச்சு ,என்னது தவளையும் ஆமையும் எனக்கு மந்திரியான்னு அதிர்ச்சியோட பார்த்துச்சு

இத பார்த்த எல்லா மிருகங்களும் சொல்லுச்சுங்க சிங்க ராஜாவுக்கு உண்மையாவே ரொம்ப வயசாகிடுச்சு ,அவரு விட்டு அம்பு குறி தவறி தவளை முன்னாடியும் , ஆமை முன்னாடியும் விழுந்திருக்குனு சொல்லி சிரிச்சிச்சுங்க ,அப்ப ஒரு கழுத சொல்லுச்சு இல்லப்பா அரசருக்கு புத்திதான் சரி இல்ல, இல்லைனா தவளையயும் , ஆமையையும் புது அரசருக்கு மந்திரியா நியமிப்பாரான்னு கேட்டுச்சு இத கேட்ட மிருகங்கள் சிரிக்க ஆரம்பிச்சுச்சுங்க

ஆனா யானை மந்திரியும் நரி மந்திரியும் மட்டும் நல்ல மந்திரிங்க தேர்வு செஞ்சாச்சுனு நினச்சுச்சுங்க,ஆனா குட்டி அரசருக்கு அதுல சந்தோசமே இல்ல

அப்ப யானை மந்திரி சொல்லுச்சு , புது அமைச்சர்கள் தேர்ந்தெடுத்தாச்சு அவுங்கள கூப்பிட்டுக்கிட்டு காட்டோட உள் பகுதிக்கு போய் கொஞ்சநாள் இருந்துட்டு வாங்கனு சொல்லி மூணு பேத்தயும் காட்டுக்குள்ள அனுப்புச்சுச்சு

குட்டி சிங்க ராஜாவும் , தவளை மந்திரியும் ,ஆமை மந்திரியும் மெதுவா காட்டு பாதையில நடக்க ஆரம்பிச்சாங்க ,கொஞ்ச தூரம் போனதும் ஒரு மரத்தடியில் போய் படுத்துகிட்டாங்க புது மந்திரிகளான தவளையும்,ஆமையும்.

இத பார்த்த சிங்க ராஜாவுக்கு சந்தேகம் வந்துச்சு ,என்ன நம்ம பயணம் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த ரெண்டு மந்திரிகளும் ஓய்வெடுக்க ஆரம்பிச்சுட்டாங்களேன்னு சொல்லி சத்தம் போட்டுச்சு ,அதுக்கு அந்த மந்திரிங்க சொல்லுச்சு இது நீண்ட பயணம் இங்க இருக்குற உணவு களை சேமிச்சு எடுத்துட்டு போனாதான் நம்ம பசி இல்லாம பயணம் போக முடியும்னு சொல்லுச்சு

இத கேட்ட சிங்க ராஜா , மூணு பேருக்கும் உணவு தேடி எடுத்துக்கிட்டு வந்துச்சு ,அப்ப ஆமை மந்திரி சொல்லுச்சு எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு ரெண்டு நாளைக்கு இங்கயே ஓய்வு எடுத்துட்டு போகலாம்னு சொல்லுச்சு ,இத கேட்ட குட்டி சிங்க ராஜாவுக்கு எரிச்சலா வந்துச்சு

பயணமே ஆரம்பிக்கல அதுக்குள்ள ரெண்டு நாள் வீணா போகுதேன்னு முணுமுணுத்துச்சு ,இருந்தாலும் இவுங்க பேச்ச கேட்டு நடந்துக்கிடணும்னு பெரிய சிங்க ராஜா சொல்லி அனுப்புச்சத்தால் அங்கேயே ரெண்டு நாள் தங்கி ஓய்வெடுத்துட்டு தன்னோட பயணத்தை தொடர்ந்துச்சு குட்டி சிங்கம்

அப்படி போகுறப்பதான் அந்த காட்டுல ஒரு விஷயத்தை பார்த்துச்சு குட்டி சிங்க ,இந்த பகுதியில் ரெண்டுநாளா புயலும் , மழையும் பெஞ்சிருக்கு ,இந்த பகுதிக்கு நாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திருந்தா நாம பாதிக்க பட்டு இருப்போம்னு புரிஞ்சிகிடுச்சு

மழை வெள்ளம் காரணமா நிறய மரங்கள் கீழ விழுந்து கிடந்துச்சு ,இப்ப அந்த இடத்துல உணவு தேடுறது ரொம்ப கஷ்டம்னு நினச்சுச்சு ,அப்பத்தான் தவளை அமைச்சரோட அறிவுரைப்படி ஏற்கனவே போதுமான அளவு உணவு நம்ம கிட்ட இருக்குன்றத்தையும் புரிஞ்சிகிட்டு மேலும் நடக்க ஆரம்பிச்சுச்சு சிங்கம்

கொஞ்ச தூரம் போனதும் இங்க நிறைய கொடிய மிருகங்கள் இருக்குறமாதிரி இருக்குனு சொல்லுச்சு தவளை மந்திரி ,தன்னோட புத்தியால புது வழி கண்டுபிடிச்சி கொடுத்துச்சு ஆமை மந்திரி ,அந்த வழியா தங்களோட பயணத்தை தொடர்ந்தாங்க அவுங்க

அப்ப தவளை மந்திரி கிட்ட கேட்டுச்சு கொடிய மிருகங்கள் அங்க இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த தவளை சொல்லுச்சு ,குட்டி அரசரே உங்க கண்ண பயன்படுத்தி பாக்குற மாதிரி ,காத பயன்படுத்தி கேக்குற மாதிரி ,உங்க மூக்கு ,அறிவு எல்லாத்தயும் பயன்படுத்துங்க அப்பத்தான் கொடிய மிருகங்களோட வாசனை ,அதுங்க போயிட்டு வந்த வழித்தடத்துள இருக்குற காலடிகள் எல்லாம் உங்களுக்கு உதவும்னு சொல்லுச்சு

இத கேட்ட குட்டி சிங்க ராஜாவுக்கு புது அறிவு பிறந்துச்சு ,ஒரு சிங்க ராஜா எத ,எப்படி கையாளனும்னு தெரிஞ்சிகிடுச்சு ,அடுத்ததா இந்த பாதை பாதுகாப்பானதுனு நீங்க எப்படி கண்டுபிடிசீங்கனு கேட்டுச்சு ஆமைகிட்ட

அதுக்கு அந்த ஆமை சொல்லுச்சு இது ரொம்ப சுலபம் ,அந்த இடத்துல நிறைய மரங்களை காட்டு மிருகங்கள் சேத படுத்தி இருந்த பார்த்தேன் ,அதனால் அதுங்க அதிகம் பயன்படுத்தாத பாதயில மரங்கள் நல்லா வளர்ந்து இருக்கணும்னு யோசிச்சேன் அதேமாதிரி இந்த பாதை ரொம்ப அமைதியா ,எல்லா மரங்களும் இயற்கயா இருக்குறத பார்த்தேன் அதனாலதான் உங்கள இந்த வழியா கூட்டிகிட்டு வந்தேன்னு சொல்லுச்சு

அப்ப ஒரு வெள்ளம் ஓடுற ஆத்த பாத்தாங்க எல்லாரும் , அப்ப சிங்க ராஜா கேட்டுச்சு இந்த வெல்லத்தை எப்படி கடக்குறதுனு கேட்டுச்சு ,நீங்க ஒரு மிகப்பெரிய காட்டுல ஆட்சி செய்ய போறீங்க எதுக்கு எடுத்தாலும் மந்திரிகளை ஆலோசன கேக்க கூடாது ,நீங்க ஒரு முடிவு எடுங்க அது சரியா இல்லையோ? இல்லைனா பிறகு பிரச்சனை வரும். நீங்க தனியா யோசிச்சு முடிவு எடுத்து, அந்த முடிவுக்கு நாங்க உதவுறோம்னு சொல்லுச்சு ஆமை மந்திரி.

இத கேட்ட குட்டி சிங்க ராஜா கொஞ்சம் யோசிச்சிட்டு, அந்த வெள்ளத்தை பார்த்து சொல்லுச்சு: “இந்த வெள்ளத்தை கடக்க எங்களுக்கு ஒரு வலுவான மரம் தேவை. அங்க போய் பார்த்தா ஒரு பெரிய மரம் இருக்கு, அதை விழுங்கி, இந்த ஆற்றுக்கு பாலமா போடலாம். நான் அதை செய்யுறேன், நீங்க ரெண்டு பேரும் உதவுங்க!”னு சொல்லி, தன்னோட வலிமையால அந்த மரத்தை தள்ளி விழுங்கினாரு. தவளை மந்திரி அதை சரியா இடம் போட உதவுச்சு, ஆமை மந்திரி மறுபக்கம் இருந்து இழுத்துச் செலுத்துச்சு. அப்படி அந்த மரம் ஆற்றில் பாலமா அமர்ந்துச்சு. மூணு பேரும் அதை கடந்து போயிடுச்சாங்க!

இந்த அனுபவத்தால குட்டி சிங்க ராஜாவுக்கு தெரிஞ்சது, வலிமை மட்டும் போதாது, அறிவும் அனுபவமும் இருந்தா தான் நல்ல ஆட்சி செய்யலாம். தவளையோட புத்தி, ஆமையோட பொறுமை, அவரோட வலிமையோட சேர்ந்து எல்லா சவால்களையும் வெல்லலாம்.

இப்படி காட்டுக்குள்ள பயணம் முடிஞ்சு, அவங்க மூணு பேரும் சுகமா திரும்பி வந்தாங்க. எல்லா விலங்குகளும் அதிர்ச்சியா இருந்தாங்க, ஆனா இப்ப சந்தோஷமா இருந்தாங்க. குட்டி சிங்க ராஜா தன்னோட அப்பா முன்னாடி தவளையையும் ஆமையையும் மந்திரியா அறிமுகம் செய்துச்சு. “இவங்க தான் எனக்கு உண்மையான உதவியாளர்கள்! வெளியில் பார்த்தா சிறியவங்க மாதிரி இருந்தாலும், அறிவால பெரியவங்க!”னு சொல்லுச்சு.

வயசான சிங்க ராஜா சிரிச்சிட்டு, “மகனே, இப்ப உனக்கு அனுபவம் வந்துச்சு. நல்ல மந்திரிகள் தேர்ந்தெடுத்திருக்கே!”னு ஆசீர்வாதம் செய்தாரு. அப்படி குட்டி சிங்க ராஜா புது ராஜாவா முடிசூடினாரு. காடு முழுக்க சந்தோஷமா இருந்துச்சு.

– நல்ல ஆட்சி செய்ய வலிமை மட்டும் போதாது, அறிவு, பொறுமை, புத்தி ஆகியவை சேர்ந்தா தான் வெற்றி! சிறியவர்களையும் அவங்க திறமையை பார்த்து மதிக்கணும்.

Read Previous

தமிழகத்தில் இன்று முதல் மழை தொடக்கம்..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Read Next

குளியலறையில் இந்த பொருட்களை வைக்க கூடாதாம்..!! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular