சியா விதைகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?.. எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்..!!

உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சியா விதைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் அதிகமாக சாப்பிடும்போது வயிறு உப்பசம், மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சியா விதைகள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை அதிகளவில் உட்கொள்வது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சியா விதைகளை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

Read Previous

நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

Read Next

ஓமம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?.. மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular