நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பழமையான உருண்டை சோறு மற்றும் கிடாக்கறி விருந்து திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிடப்பட்டு, கிடாக்கறி விருந்து தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு அமைக்கப்பட்ட உருண்டை சாதத்தை கருவறையின் இருளில் வானை நோக்கி எறிந்து பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டன. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த வினோதமான வழிபாட்டில், 10,000-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.

Read Previous

திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக புகார்..!! IPL வீரர் அபிஷேக் போரெல் கைது..!!

Read Next

சியா விதைகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?.. எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular