சிரிக்கவும்.. சிந்திக்கவும்..!! இந்த பதிவை கட்டாயமாக படிங்க..!!

சிக்கவும் சிந்திக்கவும்..!!

😁டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?இதோ

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

சிவகாசிக்கும்

நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!

😁🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILES அ உட்கார்ந்து பார்க்கணும்.

PILES க்கு பார்த்து உட்காரணும்.

😁🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

ஓவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

😁🤣 வசதி இல்லாதவன்
ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

😁🤣 ஆண்களை
அதிக தூரம் நடக்க வைக்கும்
விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!

😁🤣 என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது

பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்

சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.

😁🤣 கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???

கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்.

எலிப் பொறியில் எலி உள்ளே இருக்கும்..

*சிரித்து சிந்தியுங்கள்
இல்லைன்னா சிந்தித்து சிரியுங்கள்*

Read Previous

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி..?? அவசியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..!!

Read Next

மனைவியின் அருமை எப்போ தெரியும் தெரியுமா..?? கணவன்மார்களே இது உங்களுக்கான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular