சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்..!!

தேவையான பொருள்:

வாழைத்தண்டு 100 கிராம்
தேங்காய் துருவல் 5 கிராம்
பெருங்காயம் 5 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு
கொத்தமல்லி கீரை இலை தேவையான அளவு
நல்ல எண்ணெய் 20 மி.லி
வத்தல் 1
இஞ்சி துருவல் 5 கிராம்
தயிர் 100 மி.லி
கடுகு 5 கிராம்
உப்பு தேவையான அளவு
உளுந்தம்
பருப்பு
5 கிராம்

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக நறுக்கிய வாழைத்தண்டு மற்றும் தயிரைசேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் இஞ்சி துருவல்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொண்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாற்றினை மட்டும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு புதிதாக ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் பெருங்காயம்,கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும் வத்தல் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.தாளிக்கப்பட்ட பொருட்களை ஏற்கனவே வடிகட்டி வைத்த மோர் சாற்றுடன் சேர்த்துக்கொண்டு சிறிதளவு கொத்தமல்லி கீரை இலையையும் சேர்த்து கலக்கி விட்டால் போதும் வாழைத்தண்டு மோர் தயார் ஆகி விடும்.

Read Previous

பெண்களின் உயர்கல்விக்கு ரூ.10 லட்சம் கடன்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Read Next

VIDEO: பேருந்தை ஓட்டும் போது ஏற்பட்ட மாரடைப்பு..!! ஓட்டுநர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular