Oplus_131072
வாழ்க்கை முறை தான் காரணம்.
1.கிரீன் டீ- ஐப்பானிய மக்கள், சீன மக்கள் நிறைய வகையான டீ வகைகளை உட்கொள்கின்றனர்.பெரும்பாலும் கீரீன் டீ அவர்களுடைய வாழ்க்கையில் விருப்பமான பானமாக இருக்கிறது.
அதில் தாவரங்களை மிதமான வெயில், வெயிலில் வளர்த்து அதன் அடிப்படையில் அதன் வகைகளை பிரிக்கின்றனர்.
இதில் முக்கியமானது அதன் தயாரிப்பு.அதிக வெயில் படாமல் தாவரங்களை வளர்த்து கிரீன் டீ தயாரிககின்றனர்.இவ்வாறு வளர்ப்பதனால் அதில் குளோரோஃபில் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் தன்மை அதிகப்படும்.
கிரீன் டீ:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
மூளைக்குப் புத்தணர்ச்சசி
இருதய சம்மந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
செல் முதிர்ச்சியடைதலை தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது
2.உணவு முறை: ஐப்பானிய மக்கள் மூல உணவுகளை ( raw foods) ,கடல் உணவு வகைகள்,ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள மீன், முழு தானியங்கள், டோபூ (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது), சோயா,கடற்பாசி போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர்.
3.ஐப்பானில் உள்ள பள்ளிகளில் உணவை சரிவிகித உணவாக எவ்வாறு உண்ண வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றனர்.
4.உணவை சாப் ஸ்டிக் மூலம் உண்பதன் மூலம் சிறிய பாகமாக மற்றும் மெதுவாக உட்கொள்கிறனர்.இது செரிமானத்திற்கு உதவுகிறது.சாதரணமாக மூளை வயிறு நிரம்பிவிட்டது என்று செய்தி அனுப்ப 20 நிமிடங்கள் ஆகும்.ஐப்பானியர்கள் 80%வயிறு நிரம்பிய பின் உணவு உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர்.
6.என்ன உணவு உட்கொள்கிறோம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் எவ்வாறு உணவு உட்கொள்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
7.உணவு வகைகளை உண்ட பின் வெந்நீர் கலந்த பானம் அல்லது டீ அருந்துகின்றனர்.அது உணவு செரிமானம் அடைவதை துரிதப்படுத்துகிறது.
8 .பொது போக்குவரத்து ஐப்பான் மற்றும் சீனாவில் அதிகம்.பள்ளிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்து நம் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தினால் யாராக இருந்தாலும் நலமுடன் இருக்கலாம்.




