சீரகத்தில் உள்ள மருத்துவ பயன்கள்..!! சீரகம் பல வியாதிகளுக்கு ஒரு அற்புதமான மருந்து..!!

நம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சீரகம் நம் நினைத்து கூட பார்க்காத வியாதிகளை எல்லாம் சரி செய்யும் தன்மை கொண்டது. சீரகத்தின் மருத்துவ பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

 

Read Previous

மனதை தொட்ட சிறுகதை..!! பாட்டி வடை சுட்ட கதை..!! கண்டிப்பாக அனைவரும் படிக்கவும்..!!

Read Next

தேங்காய் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular