காலை நேரத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதன் மூலம் நமது உடல் புத்துணர்வு அடைந்ததாக நாம் நினைக்கிறோம் ஆனால் சுடுதண்ணீரில் குளிப்பதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி இங்கு காண்போம்…
குளிர்காலத்தில் தினமும் சுடுதண்ணீரில் குளிப்பதால் முடி மற்றும் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் பார்ப்போசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது நமது சருமம் மற்றும் முடியில் இயற்கையாகவே எண்ணெய் பசை இருக்கும் இந்த எண்ணெய் பசை இல்லை என்றால் முடி வறண்டு போய்விடும் தினந்தோறும் சுடுதண்ணீரில் குளிப்பதால் இந்த இயற்கை எண்ணெய் லேயர் அடுக்க காணாமல் போகிறது இதனால் முடியும் சருமமும் அழகிலக்கும் அது மட்டுமின்றி முடி இழப்பு அபாயங்களும் ஏற்படலாம். ஆகையால் குளிர்காலத்தில் வெந்நீரைத் தவிர்த்து விட்டு மிதமான வெப்பம் உள்ள நீரில் குளிப்பது சிறந்தது, அதே போல் வெந்நீரில் குளிப்பதன் மூலம் நமது தோல் குறுகிய காலத்திலே சுருங்கும் தன்மை பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதன் மூலம் உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




