சுண்ட வத்தக் குழம்பு செய்வது எப்படி..??

Oplus_131072

சுண்ட வத்தக் குழம்பு செய்வது எப்படி…..

தேவையானவை

வெந்தயம்,
சோம்பு,
சீரகம்,
கடுகு,
மஞ்சள்தூள்,
தனியா தூள் 1 டீஸ்பூன்,
பூண்டு,
சின்ன வெங்காயம் – தலா 10
மிளகாய் வத்தல் – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் ( தேவையான அளவு )
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய்,
சுண்டைக்காய் (வத்தல்)
செய்முறை

சட்டியில் சிறிது நெய் விட்டு சுண்டவத்தலை வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு நல்லெண்ணெய் விட்டு காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், கறிவேப்பிலை போட்டு வெங்காயம் நன்றாக சிவக்கும் வரை வதக்கவும்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலாக மிதந்து வந்ததும் இறக்கி வறுத்த சுண்ட வத்தலை போட்டுக் கலக்கவும்.

 

Read Previous

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சமையல் குறிப்புகள் மற்றும் வீட்டு குறிப்புகள்..!!

Read Next

முட்டை பணியாரம் இந்த மாதிரி ஒரு முறை செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular