சுரைக்காயை வைத்து வடை செய்ய முடியுமா..!! இனி சுரைக்காயை யாரும் பிடிக்காது என்று கூற முடியாது..!!

சுரைக்காய் நமது உடலுக்கு பல நன்மைகளை தரும் ஒரு காய் ஆகும். உப்பு நீர் வெளியேற்றம் உடல் சூட்டை குறைத்தல் தேவையற்ற சதைகளையும் குறைத்தல் என பல நன்மைகள் இதில் உண்டு. மேலும் இதில் நீர் சத்து அதிகமாக உள்ளது.

தேவையானவை:

சுரைக்காய் துருவியது-1 கப்,

அரிசி மாவு-1 கப்,

பச்சை மிளகாய் – 3,

வெங்காயம்- 2,

மிளகு சீரகம்- ஒரு ஸ்பூன்,

உப்பு- தேவையான அளவு,

கறிவேப்பில்லை- சிறிதளவு.

செய்முறை:

துருவிய சுரைக்காயை ஒரு பாத்திரத்தில் வெள்ளைத் துணிக்கொண்டு வடிகட்டியப்பின் அரிசி மாவை அதில் சேர்த்து கொள்ளவும்.  பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கிளறவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த மாவை வடை போல் தட்டி பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.அவ்வளவு தான், சூடான சுவையான சுரைக்காய் வடை தயார்.

நன்மைகள்:

சுரைக்காய் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும். பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, பல வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன.

Read Previous

காலையில் சீக்கிரம் எழுந்தால் இவ்வளவு பயன்களா..!! இதை செய்தால் உங்கள் நாள் சிறந்ததாக இருக்கும்..!!

Read Next

மீந்து போன சாதம் இருந்தால் இப்படி செய்து பாருங்கள்..!! ஒரே நிமிடத்தில் தட்டு காலியாக வைக்கும் செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular