சுவையான தித்திக்கும் பிரட் அல்வா எப்படி செய்வது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

 

பிரட் அல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் என்றால் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிரட் அல்வா பிடிக்கும். இந்நிலையில் சுவையான தித்திக்கும் பிரட் அல்வா வீட்டிலேயே மிக சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:::

பிரெட்தூள் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – அரை கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
முந்திரி – 10
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
ஆரஞ்ச் ஃபுட்கலர் – சிறிது

செய்முறை:::

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரையும்வரை சூடாக்கி இறக்கிவைக்கவும்.ஒரு நான்-ஸ்டிக் தவாவில் பிரெட்தூள், 2 டீஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் நான்கு நிமிடங்கள் வறுக்கவும்.
பிரெட் தூளில் கலர் லேசாக மாறும்போதே, கரைத்து வைத்துள்ள சர்க்கரைத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.
இடையிடையே ஒவ்வொரு ஸ்பூனாக நெய் சேர்க்கவும்.
ஃபுட் கலரை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து, பிரெட் கலவையில் சேர்த்துக் கிளறவும்.
கிண்டும் கலவையை கரண்டியில் எடுத்து வேறு ஒரு தவாவில் விட்டால் கரண்டியில் ஒட்டாமல் விழும் பக்குவம் வரும் வரை தொடர்ந்து கிளறவும்.
பிறகு முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு இறக்கவும். சுவையான தித்திக்கும் பிரட் அல்வா தயார்.

 

 

Read Previous

வயிற்று வலிக்கு இயற்கையான முறையில் நிவாரணம் பெற கண்டிப்பாக இது எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 32 பேருக்கு ரூ.90,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular