10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Case worker, Security Guard, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Case worker, Security Guard, Multi Purpose Helper பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors Degree / SSLC / HSC தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.09.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/09/2024091944.pdf

 

Read Previous

ஒருமுறை இந்த மாதிரி மட்டன் குழம்பு வச்சு பாருங்க..!! சுவை அள்ளும்..!!

Read Next

அம்மா என்பவள் மற்றவர்களை விட ஏன் உயர்ந்தவளாக கருதப்படுகிறாள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular